கிளிநொச்சியில் சாதனையாளர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு

96 ஆம் ஆண்டு கல்வி பொது சாதாரண தரத்தில் கல்வி கற்ற மாணவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட கிளிநொச்சி சாதாரண தர அமைப்பின் ஏற்பாட்டில் 2025 ஆம் ஆண்டு ஒன்று கூடலும் மாணவர்களை கௌரவிப்பு நிகழ்வு கிளிநொச்சியில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வானதுநேற்று சனிழக்கிழமை காலை 10.20 மணியளவில் இன்னிய தமிழ் பாரம்பரிய கலைவாத்தியங்களுடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு அமைப்பின் கீதங்கள் இசைக்கப்பட்டு, மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

இன் நிகழ்வில் 2025 ஆம் ஆண்டு கல்வி உயர்தரத்தில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தில் சிறந்த பெருபேர்களை பெற்ற மாணவர்களையும், விழிப்புணர் அற்றவர்களுக்கான டிஜிட்டல் முறையிலான வெள்ளை பிரம்புகளை கண்டுபிடித்த மாணவனையும் ஆகிய சாதனையாளர்களை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களினால் மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

இன் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக 96 ஆம் ஆண்டு கல்வி பொது சாதாரண தரத்தில் கல்வி கற்ற மாணவர்களின் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் அவர்களும், மாவட்டத்தின் இரண்டு கல்வி வளையங்கள் சார்ந்த வலயக் கல்வி பணிப்பாளர்களும், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் கிளிநொச்சி சாதாரண தர அமைப்பி உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.