செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு!

யாழ் .செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் நிறைவடைந்துள்ளன.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் 45 ஆவது நாள் அகழ்வு இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

அகழ்வு பணிகள் இன்று (06) யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.

இதுவரையில் செம்மணி மனித புதைகுழியில் இருந்து 240 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் 239 என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கையும் கிருஷாந்தி கொலை வழக்கையும் ஒன்றாக இணைப்பதாக இருந்தால் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.