முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது
மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதேவேளை, பியல் மனம்பேரியின் சகோதரர் சம்பத் மனம்பேரியின் கட்சி உறுப்புரிமையை உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.