மட்டு.கிரான்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!
மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கிரான்குளம் தர்மபுர சந்தி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் முருகேசு மனோகரன் (வயது 68) என்பவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து இடம் பெற்று பலத்த காயங்களுடன் ஆரையம்பதி வைத்தியசாைலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.