தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தெரிவு

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டி முன்னாள் பிரதமர் ஷினாவத்ராவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குமாறு அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய பிரதமரை தெரிவு செய்வதற்காக 492 உறுப்பினர்களை கொண்ட அந்நாட்டு பாராளுமன்றத்தின் கீழ்சபையில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

அதில், அனுடின் சார்ன்விரகுல் மற்றும் சாய்கசேம் நிடிஸ்ரீ இடையே கடும் போட்டி நிலவியது.

இந்தநிலையில் குறித்த வாக்கெடுப்பில் அனுடின் சார்ன்விரகுல் வெற்றி பெற்று அந்நாட்டின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார்.