கொழும்பில் நாளை பல பகுதிகளில் 09 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை சனிக்கிழமை காலை 10.30 முதல், 09 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது .

பத்தரமுல்ல, பெலவத்த, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, நுகெகொடை, நாவல, மஹரகம, பொரலஸ்கமுவ, இரத்மலானை, தெஹிவளை, மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக 09 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடையை அமுல்படுத்தவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.