பாலியல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட ஹெய்டர் அலி

 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹெய்டர் அலி இங்கிலாந்தில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த ஓகஸ்ட் 4 ஆம் திகதி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

ஜூலை 23 ஆம் திகதி பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹெய்டர் அலி மீது முறைப்பாடு செய்யப்பட்டது.

இருப்பினும் கைது செய்யப்பட்ட ஹெய்டர் அலி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உடனடியாகச் செயல்பட்டு, விசாரணை முடியும் வரை அவரை இடைநீக்கம் செய்தது.

இந்த இடைநீக்கம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் வீரர் நலன்புரி நெறிமுறைகள் மற்றும் நடத்தை விதிகளின்படி மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஹெய்டர் அலிக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்காததால் அவர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்