நாளை வெளியாகவுள்ள 5 திரைப்படங்கள்

 

நாளைய தினம் 5 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன.

இதன்படி ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள “மதராஸி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யுத் ஜம்வல் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அத்துடன் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அடுத்ததாக வெற்றிமாறன் தயாரிப்பில் “பேட் கேர்ள்” {Bad Girl} என்ற திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தில் அஞ்சலி சிவராமன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் பாலா நடித்த்துள்ள “காந்தி கண்ணாடி” திரைப்படமும் நாளை வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்தின் மூலம் பாலா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

பாலாவின் புதிய முயற்சியாக உருவான இந்த திரைப்படம், சமூக பிரச்சனைகள் மற்றும் உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள “காட்டி” திரைப்படம் வெளியாகவுள்ளது.

தனித்துவமான கதையம்சத்துடன் உருவான அனுஷ்காவின் படைப்பு, பெண்கள் மையமாக இருக்கும் சுவாரஸ்யமான த்ரில்லர் திரைப்படமாகும்.

இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கு சினிமா துறையில் அறிமுகமாகினார்.

மேலும் “தி கான்ஜூரிங்: லாஸ்ட் ரைட்ஸ்” என்ற திரைப்படமும் நாழி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.