தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவன் சாதனை!

-மூதூர் நிருபர்-

மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகள் மெய்வல்லுநர்கள் போட்டியில் தி/மூ/ தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி மாணவன் எம்.எஸ்.முகமட் 16 வயது கீழ் குண்டு வீசுதல் நிகழ்வில் கலந்து கொண்டு முதலாவது இடத்தினைப் பெற்று புதிய மாகாண போட்டி சாதனையோடு தங்கப்  பதக்கத்தினை  பெற்றுக் கொண்டார்.

இம் மாணவன் 16 வயதின் கீழ் குண்டு போடுதலில் 13.01 மீற்றர் தூரம் குண்டு போட்டு தங்கப் பதக்கத்தினை சுவீகரித்து புதிய மாகாண சாதனையை புரிந்துள்ளார்.

இம் மாணவனை பயிற்றுவித்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சுஹைல், விளையாட்டு ஆசிரியர் தினேஷ்குமார் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.