கின்னஸில் இடம்பிடித்த இந்தியாவின் மேம்பாலம்

மஹாராஷ்டிராவின் நாக்பூரில் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது .

மஹாராஷ்டிராவின் நாக்பூரில் இந்திய மதிப்பில் 573 கோடி ரூபாய் செலவில் சுமார் 5.6 கிலோமீற்றர் தூரத்திற்கு இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் மிக நீளமான ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையைப் பெற்றுள்ள நாக்பூர் மேம்பாலம், இந்தியாவின் உட்கட்டமைப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இந்நிலையில் மிக நீளமான ஈரடுக்கு மேம்பாலம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.