முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர விடுதலை

பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கி பராமரிப்பாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கிலிருந்து பூஜித் ஜயசுந்தரவை இன்று புதன்கிழமை விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.