கல்முனை பள்ளி வீதி திறந்து வைப்பு

-அம்பாறை நிருபர்-

அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம் – 2025 இன் முதற்கட்டமாக அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட கல்முனை “பள்ளி வீதி” காபட் வீதியாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்திய நிறைவேற்றுப் பொறியியலாளர் மற்றும் அதன் உத்தியோகத்தர்கள், பிரதேசத்தின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவ்வீதி திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன் போது வீதியின் அருகாமையில் காணப்படும் வாடிகான்களுக்கு வடிகான் மூடி இடுவதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

வ்வேலைத்திட்டமானது அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி.யின் வேண்டுகோளின் பேரில் கடந்த ஆகஸ்ட் 22 வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கல்முனை பள்ளி வீதி திறந்து வைப்பு