சூடானில் ஏற்பட்ட மண்சரிவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
மேற்கு சூடானின் மர்ரா மலை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மண்சரிவில் ஒருவர் மாத்திரமே உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது .
கனமழையைத் தொடர்ந்து,கடந்த ஒகஸ்ட் 31 ஆம் திகதி மண்சரிவு ஏற்பட்டுள்ளது .
மேற்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு, இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையிலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பலியானவர்களின் உடலங்களை மீட்க உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது .
மண்சரிவு ஏற்பட்ட கிராமம் தற்போது முழுமையாகத் தரைமட்டமாகியுள்ளது .
