பெண் சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!
தேடப்படும் பெண் சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 03 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாக ஐந்து பெண்கள் ரக்வானை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் சந்தேகநபர் தனது வீட்டு முகவரியை விட்டு வெளியேறி தற்போது தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
40 வயதான சந்தேகநபர் ரக்வானை, பொதுப்பிட்டியா வீதி, கந்தகம பகுதியைச் சேர்ந்த தலுகொட ஆராச்சிலாகே ஹர்ஷனி பிரியந்திகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரைப் பற்றி ஏதேனும் தகவல் அறிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார், பொதுமக்களை கோரியுள்ளனர்.
ரக்வானை பொலிஸ் நிலையம் – 071 – 8591394
ரக்வானை பொலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு – 071 – 8593808
