அமீர்டீன் முகம்மட்டின் சிறுகதை நூல் வெளியீட்டு விழா
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை அமீர்டீன் கே.முகம்மட் எழுதிய “கனாக் காணும் வினாக்கள்” சிறுகதை நூல் வெளியீட்டு விழா திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்றது.
திருகோணமலை தமிழ் சங்கத்தின் நல்லாசியுடன் இடம் பெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னால் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கலந்து சிறப்பித்தார். நூலின் முதற் பிரதியை நூலாசிரியர் அமீர்டீன் கே.முகம்மட் பிரதம அதிதிக்கு வழங்கி வைத்தார்.
இதனை திருகோணமலை தமிழ் சங்க தலைவர் திருமலை நவம் நெறிப்படுத்தியிருந்தார்.
இதில் தென் கிழக்கு பல்கலைக்கழக மொழித் துறை பேராசிரியர் ஏ.எப்.எம் .அஷ்ரப் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.



