செம்மணி மனித புதைகுழியில் இன்றும் 12 என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்
யாழ்ப்பாணம் – செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இன்றைய நாளுக்கான அகழ்வுப்பணிகளின் போது 12 என்புக்கூட்டுத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் 10 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அரைநாள் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் போது அவர் செம்மணிக்கு வருகைதருவாரா? என்பது தொடர்பில் நீதிமன்றுக்கு இதுவரையில் அறியப்படுத்தப்படவில்லை என பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
