யுனிசெஃப் பாதுகாப்புத் தலைவருடன் மத்திய மாகாண ஆளுநர் சந்திப்பு

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத். அபயகோன் அவர்களுக்கும் யுனிசெஃப் நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு பிரிவின் தலைவர் டியோனா எஸ்லனிசிவிலி (Teona Aslanishvili) ஆகியோர்களுக்கிடைய சந்திப் பொன்று கண்டியில் இடம் பெற்றது.

கண்டியில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடந்த இச் சந்திப்பின் போது.யுனிசெஃப் நிறுவனம் வழங்கும் சேவைகள், குறிப்பாக குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான சிறப்புத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் ஆரம்பிக்கப்பட உள்ள “சிறுவர் நட்பு தொடர்பான மத்திய நிலையத்யத்தின்” நிர்மாணம் குறித்தும் ஆராயப்பட்டது.

அதன்படி, கண்டி மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த விசேட திட்டத்தை செப்டம்பர் மாதத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது, அதற்கான செயல்முறை குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் யுனிசெஃப் பிரதிநிதிகள் குழுவும், மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் மஞ்சுளா மடஹபொல உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டனர்.