திருகோணமலையில் ஐந்து புதிய நிரந்தர வீடுகள் திறந்து வைப்பு

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மேலும் ஐந்து வீடுகள் நேற்று சனிககிழமை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாரிஸ் தலைமையில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃறூப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தும்; தற்கால அசாதாரண பொருளாதார சூழலில் வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற நிரந்தர வீடுகளின்றி கஸ்டப்படுகின்ற ஐந்து குடும்பங்களுக்கே மேற்படி வீடுகள் கையளிக்கப்பட்டது.

சிலி நாட்டைத் தலைமையைகமாகக் கொண்டு இயங்கும் சர்வதே தொண்டு ஸ்தாபனமான SELAVIP Foundation நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் மக்கள் சேவை மன்றம் 40 நிரந்தர வீடுகள் இந்த ஆண்டு நிர்மாணித்தது.

இவை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வுகள் பல கட்டங்காளாக நடைபெற்று வருகின்றது.

அந்த அடிப்படையில் இந் நிகழ்வு ஆறாவது கட்டமாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் எம். நௌபர் (திருமலை பிரதேச சபை உறுப்பிர்), என். எம். ஹிதாயத்துல்லாஹ் (அதிபர்). கே. எம். றியாஸ் (சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்), மக்கள் சேவை மன்ற சிரேஸ்ட உத்தியோகத்தர்களான . பிரகலநாதன், எம். யூ. குவைசர், திருமதி. பீ. கிரிஸ்னவேணி, . எம். சாஸ்த், உலமாக்கள் மற்றும் சமூகமட்ட நிறுவன உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டதுடன் இந்த வீட்டுத்திட்ட உதவி புரிந்த மக்கள் சேவை மன்றத்திற்கு பயனாளிகளும், கலந்து கொண்ட அதீதிகளும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் ஐந்து புதிய நிரந்தர வீடுகள் திறந்து வைப்பு
திருகோணமலையில் ஐந்து புதிய நிரந்தர வீடுகள் திறந்து வைப்பு