திருகோணமலையில் வடிகானுக்குள் விழுந்து மோட்டார் சைக்கிள் விபத்து!

-மூதூர் நிருபர்-

திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் இன்று சனிக்கிழமை காலை மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருஞானசம்பந்தர் வீதியின் கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சோனகவாடி பகுதியில் இருந்து சிவன்கோவில் பகுதியை நோக்கி இருவருடன் பயணித்த மோட்டார் சைக்கிளே, வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி வடிகானுக்குள் வீழ்ந்துள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில்,திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.