இடம்மாற்றம் பெற்று சென்ற ஆசிரியரை போக வேண்டாம் என கண்ணீர் விட்டு அழுத மாணவர்கள்!
இடம்மாற்றம் பெற்று சென்ற ஆசிரியையை தங்களை விட்டு போக வேண்டாம் என தெரிவித்து மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் ஆந்திர மாநிலம், ஆத்மகூர் பகுதியில் உள்ள ஒரு அரசு ஆரம்ப பாடசாலையில் வனஜா என்பவர் 7 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றினார்.
அவர் தனது சொந்த திறமை மற்றும் தனிப்பட்ட பாணியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தினர்.
இது அந்த பாடசாலையில் உள்ள குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. மேலும் அங்குள்ள பெற்றோர்களும் ஆசிரியைக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் ஆசிரியர் வனஜா பதவி உயர்வு பெற்று வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த 26 ஆம் திகதி பாடசாலையில் இருந்து விடைபெறும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடசாலை குழந்தைகள் வனஜாவை சூழ்ந்தபடி மேடம் போகாதீர்கள் என கூறியபடி கதறி அழுதனர்.
சில பாடசாலை குழந்தைகள் அவரை கட்டி அணைத்துக்கொண்டு கண்ணீர் வடித்தனர்.
ஆசிரியை வனஜாவுக்கும் கண்ணீர் பெருக்கெடுத்தது. அவர் பாடசாலை குழந்தைகளை சமாதானம் செய்துவிட்டு புறப்பட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.