நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய முன்னாள் நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்
கடந்த 26ஆம் திகதி கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் களுத்துறை நகர சபை உறுப்பினர் தனுக ஹெட்டியாராச்சி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று குறித்த உத்தரவைப் பிறப்பித்தது.
இதன்படி அவரை எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது