கோஸ்டாரிகாவில் பிரகாசமான ஆரஞ்சு நிற சுறா கண்டுபிடிப்பு
கோஸ்டாரிகாவில் உள்ள டோர்டுகெரோ தேசிய பூங்கா (Tortuguero National Park) அருகே ஒரு மீனவர் அதிசயமான, பிரகாசமான ஆரஞ்சு நிற சுறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது வழக்கமான சுறா அல்ல.
இதுபோன்று உலகில் வேறெங்கும் இதுவரை கண்டறியப்படாத முதல் சுறா இதுவென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த சுறாவின் அசாதாரண நிறத்திற்குக் காரணம், சாந்திசம் (xanthism) எனப்படும் ஒரு அரிய மரபணு நிலைதான்,
இந்த நிலையில், உயிரினங்களின் தோலில் உள்ள கருமையான நிறமிகள் (pigments) குறையும்போது, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறங்கள் மிகவும் பிரகாசமாகத் தெரியும்.
இந்த சுறாவுக்கு மேலும் தனித்துவத்தை சேர்ப்பது அதன் வெள்ளையான கண்கள்.
இது இந்த சுறாவுக்கு அல்பினிசம் (albinism) எனப்படும் மற்றொரு மரபணு குறைபாடும் இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
அல்பினிசம் என்பது மெலனின் (melanin) என்ற நிறமியின் உற்பத்தி குறைவதாலோ அல்லது இல்லாமலோ ஏற்படுவது.
இது ஒரு உயிரினத்தின் தோல், முடி, மற்றும் கண்களின் நிறத்தை வெண்மையாக மாற்றும்.