இந்தியாவும் ஜப்பானும் நிபுணர்களைப் பரிமாறிக் கொள்ள ஒப்பந்தம் கைச்சாத்திடுகின்றன

ஜப்பானும் இந்தியாவும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5  இலட்சத்துக்கு  மேற்பட்ட நிபுணர்களைப் பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன.

ஜப்பானியப் பிரதமர் இஷிபா ஷிகெருவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இது தொடர்பில்  ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

சுற்றுலா, கல்வி மற்றும் தொழிலாளர் துறைகளில் தொழிலாளர்களைப் பரிமாறிக் கொள்வதே இத் திட்டத்தின் நோக்கமாகும்.

நாளை  இந்திய – ஜப்பானிய  பிரதமர்களுக்கிடையிலான சந்திப்பின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது .

செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட மருத்துவ ஆராய்ச்சி போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே உறவுகளை ஏற்படுத்துவதையும் இந்த சந்திப்பு நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.