இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஒன்றிணைந்த நேர அட்டவணைகளை செயற்படுத்துவதில் உள்ள சிக்கல்களால் , இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
பணிப்புறக்கணிப்பால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர் ..
இதேநேரம் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்களுக்கு ஒன்றிணைந்த நேர அட்டவணை முறைமையை செயற்படுத்துவதற்கான முன்னோடி திட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.
