சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஆர்.எம்.உவைஸ் பதவியேற்பு
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக கல்வி சேவையில் அனுபவம் வாய்ந்த ஏ.ஆர்.எம்.உவைஸ் இன்று புதன்கிழமை தனது பதவியை ஏற்றுக் கொண்டார்.
புதிய அதிபரின் பதவி ஏற்பு பற்றி பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில்,
“மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் பொது விழிப்புணர்வை உயர்த்தும் வகையில் பாடசாலையை முன்னேற்றும் திட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்துவார் என எதிர்பார்ப்பதாக”* கருத்து தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில் “திறமை மற்றும் அனுபவம் பாடசாலையின் வளர்ச்சிக்கு இது புதிய அடித்தளம் அமைக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்.