சாய்ந்தமருதில் இரவு நேர சுகாதார திடீர் பரிசோதனை நடவடிக்கை

-அம்பாறை நிருபர்-

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொரித்த கிழங்கு வகைகள், உடனடி சமைத்த உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது இரவு நேர திடீர் பரிசோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி டாக்டர் சகிலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனைக்கமைய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் அவர்களின் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இப்பரிசீலனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கரையோர பகுதி மற்றும் பிரதான வீதிகளில் உள்ள பொரித்த கிழங்கு வகைகளை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் உடனடி சமைத்த உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்களில் இரவு நேர உணவுப் பாதுகாப்பு சுகாதாரம் தொடர்பான சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இத்திடீர் சுற்றிவளைப்பின் போது உணவகங்கள் பார்வைக்கு உட்படுத்தப்பட்டு அங்கு மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டதோடு அவ் உணவகங்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

சாய்ந்தமருதில் இரவு நேர சுகாதார திடீர் பரிசோதனை நடவடிக்கை
சாய்ந்தமருதில் இரவு நேர சுகாதார திடீர் பரிசோதனை நடவடிக்கை