இந்தியாவின் மும்பையில் கட்டிடம் இடிந்து விபத்து – இருவர் உயிரிழப்பு

இந்தியாவின், மும்பைapd; பால்கர் மாவட்டத்தில் உள்ள விராரில் 4 மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

அதில் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 2 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி 9 பேர் காயமடைந்துள்ளனர்.

வசாய் தாலுகாவில் உள்ள நாரங்கி வீதியில் சாமுண்டா நகருக்கும் விஜய் நகருக்கும் இடையில் அமைந்துள்ள ரமாபாய் அடுக்குமாடி குடியிருப்பின் பின்புற பகுதி நேற்று செவ்வாய்கிழமை நள்ளிரவு 12:05 மணியளவில் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 9 பேர் மீட்கப்பட்டு விரார் மற்றும் நலசோபாரா வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர், தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தில் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கட்டிடத்தின் ஏனைய பகுதிகளிலும் வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.