உளநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நிர்வகிப்பதற்கான திறன் விருத்தி பயிற்சி செயலமர்வு

-அம்பாறை நிருபர்-

உளநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மேலாண்மை மற்றும் பராமரிப்பில் நேரடியாக ஈடுபடும் தாதிய உத்தியோகத்தர்களின் திறனை மேம்படுத்தி குறித்த நோயாளர்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் தாதிய உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திறன் விருத்தி பயிற்சி செயலமர்வு திங்கட்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

அதில் கல்முனை பிராந்திய உளநலப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.அருந்திரன் அவர்களினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உளநல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் யூ.எல்.சராப்டீன் வளவாளராக கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினார்.

மேலும், உளநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நிர்வகித்தல், கண்காணித்தல், சிகிச்சையளித்தல், பராமரித்தல் மற்றும் உளநல கல்வி போன்றவற்றுடன் நேரடியாக தொடர்புள்ள தாதிய உத்தியோகத்தர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சி செயலமர்வு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் உள மருத்துவ சமூக பணியாளர் எம்.ஆர்.எம்.ஹமீம், உளநல பிரிவின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

உளநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நிர்வகிப்பதற்கான திறன் விருத்தி பயிற்சி செயலமர்வு
உளநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நிர்வகிப்பதற்கான திறன் விருத்தி பயிற்சி செயலமர்வு