மீண்டும் ஒருநாள் போட்டிகளில் பிரெண்டன் டெய்லர்

சிம்பாப்வே அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான பிரெண்டன் டெய்லர் மீண்டும் சிம்பாப்வே அணியின் ஒருநாள் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

இவர் இறுதியாக கடந்த 2021அம் ஆண்டு இடம்பெற்ற அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடியிருந்தார்.

இதன் பின்னர் கடந்த சில ஆண்டுகளாக அவர் ஒரநாள் போட்டிகளில் விளையாடவில்லை.

இந்தநிலையில் பிரெண்டன் டெய்லரை மீண்டும் அணியில் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என சிம்பாப்வே தேர்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் டேவிட் முட்டேண்டெரா கூறினார்.

அத்துடன் அவரது அனுபவமும் தரமும் விலைமதிப்பற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்