
முன்னாள் ஜனாதிபதி ரணில் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்!
பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.
வழக்கு அழைக்கப்பட்டபோது, சந்தேக நபர் ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை .
