
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஒரு பசு வழங்கும் வேலைத்திட்டம்
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 09:09 மணி தொடக்கம் 10.00 மணி வரையுள்ள சுப நேரத்தில் ஆலய புனருத்தாரண திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டது.
அதற்கு அமைவாக கருக்கல் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக இறையருளுடன் நடைபெற்றது.
அன்றய தினம் 11.30 மணிக்கு மிகவும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஒரு பசு வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக, நான்காம் கட்டமாக, மண்முனை மேற்கு, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து தலா மூன்று பேர் வீதம், பிரதேச செயலாளர்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட ஆறு பயனாளிகளுக்கு பசு வழங்கி வைக்கும் நிகழ்வு, மிகச் சிறப்பான முறையில் ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில், ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர்ஆலய வண்ணக்குமார், தேச மகாசபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.








