ஊடகவியலாளர்களின் உயிர்களுக்கான பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும்

காசாவில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் இஸ்ரேல் தாக்குதல்களில் 4 ஊடகவியலாளர் உள்ளிட்ட 19 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

காசா நகரின் வடபகுதிகளில் அமைந்துள்ள வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த விமானத் தாக்குதல்களின்போது குடியிருப்பு பகுதிகளும் சேதமடைந்துள்ளன.

இதன் போது அங்கு செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அல் ஜஸீரா ஊடகவியலாளர் உள்ளிட்ட 4 பேர் இதில் பலியாகியுள்ளதாக, அந்நாட்டு அரச ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களில் பலர் காயமடைந்ததாகவும், பல குடியிருப்பாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊடகவியலாளர்களின் உயிர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சர்வதேச ஊடக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.