
பிரதி பொலிஸ்மா அதிபர் கைது!
கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா உதித்த லியனகே இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் – ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில், தமது மனைவி புதையல் தோண்டியமை தொடர்பாக , குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, குறித்த கொழும்பு பிரதி பொலிஸ்மா அதிபரின் மனைவி மற்றும் 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
