எதிர்வரும் திங்கட்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம்
பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணிக்கு பணிப்புறக்கணிப்பு ஆரம்பமாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
மருத்துவ அதிகாரிகளின் இடமாற்ற செயல்முறை தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
