நுவரெலியாவில் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு பாதயாத்திரை

சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பாதயாத்திரை இன்று சனிக்கிழமை நடைபெற்றது .

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் மாநகரசபை மண்டபத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகம் வரை பாதயாத்திரையாக சென்றனர் .

இதன் போது சிறு­வர்கள் எதிர்­நோக்கும் பாரிய சவால்­களில் ஒன்­றான துஷ்­பி­ர­யோகம் சம்பந்தமான துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டு விநியோகம் செய்தனர் அத்துடன் பாலியல் சுரண்டல் தொடர்பான பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி குறித்த விழிப்புணர்வு பாதயாத்திரையினை முன்னெடுத்தனர்.

‘எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாக்கும்’ பீஸ் அமைப்பானது (PEaCE/ECPAT Sri Lanka) சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் சுரண்டல்களை இல்லாதொழித்தலை தன் பிரதான வேலைத்திட்ட தொனிப்பொருளாக கொண்டு முன்னிலை வகித்து, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

சிறு­வர்­களை துஷ்­பி­ர­யோ­கங்­களில் இருந்து பாது­காத்து அவர்­க­ளுக்கு சிறந்த சூழல் ஒன்றை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தென்­பது இன்­றைய சமு­தாயம் எதிர்­நோக்கும் பாரிய சவால்­களில் ஒன்­றாகும் எனவும் ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்தனர் .

குறித்த நிகழ்ச்சியில் நுவரெலியா வலய கல்வி காரியாலயத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர் , மகளிர் சம்பந்தப்பட்ட பொது நலன் விரும்பிகள், நுவரெலியா தலைமையக பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர்கள் உட்பட நுவரெலியா மாவட்ட செயலக அதிகாரிகள் பலரும் கலந்துக் கொண்டனர்.