உறக்கமின்றி தவித்தவர் தனக்கு தானே தீ மூட்டி உயிரிழப்பு
உறக்கமின்மை காரணமாக யாழில் மூதாட்டி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை காலை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த புஸ்பவதி விஜயரட்ணம் (வயது 75) என்பவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.
குறித்த மூதாட்டி உறக்கம் இன்மையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் தனக்கு தானே தீ மூட்டி உயிரை மாய்த்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
