ஆகஸ்ட் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 01 ஆம் திகதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 15 இலட்சத்து 15 ஆயிரத்து 043 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இவ்வாண்டின் ஆகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 755 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இம் மாதத்தின் முதல் 20 நாட்களில் அதிகளவான சுற்றலுாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 33,588 ஆகும்.
மேலும் ஐக்கிய இராச்சித்திலிருந்து 15,726 சுற்றுலாப் பயணிகளும், இத்தாலியிலிருந்து 10,501 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 9,299சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 8,966 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 8,819 சுற்றுலாப் பயணிகளும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
