தாஜ்மஹால் மீது விமானங்கள் பறப்பதில்லை ஏன் தெரியுமா..?

தாஜ்மஹால் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹால் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 7 கிலோ மீட்டர் பரப்பளவில் விமானங்கள் பறப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

அதாவது இந்தியாவின் புகழ்பெற்ற தாஜ்மஹால் 1983ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டதனால் ,

உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹாலைப் பார்க்க வருகை தருகிறார்கள்.

தாஜ்மஹாலை பார்வையிடும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 2006ஆம் ஆண்டு இது பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

அப் பகுதியில் ஏற்படும் நெரிசல் மற்றும் விபத்துகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.