சம்மாந்துறை-வளத்தாப்பிட்டி பிரதான வீதியில் அமைதி வழி போராட்டம்

-அம்பாறை நிருபர்-

100 நாட்கள் செயல்முனைவின் 21ஆவது நாள் அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசம் வளத்தாப்பிட்டி பிரதான வீதியில் இன்று இடம்பெற்றது

நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 21ஆவது நாள் நிறைவினை முன்னிட்டு அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன் இதன்போது மக்கள் பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன் போது நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 21ஆவது நாள் குறித்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் ஊடக வெளியீடு ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.

நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனைவின் 21 ஆவது நாளில் இலங்கையின் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வே அவசியம் என ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

இது தவிர தொடர்ச்சியாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள் மத சுதந்திர மீறல்கள் ஏனைய வன்முறைகள் இடம்பெறாமல் இருப்பதாக இருந்தால் வட கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி இக்கவனஈர்ப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது .