கிளிகரைச்சி கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுக்களை வலுப்படுத்தும் செயலமர்வு

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுக்களை வலுப்படுத்தல் தொடர்பான இரண்டாம் கட்ட செயலமர்வு இன்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வு World Vision (வேள்ட் விஷன்) நிறுவனத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி நகரிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

கோணாவில், ஊற்றுப்புலம், ஸ்கந்தபுரம், அக்கராயன், புதுமுறிப்பு, செல்வாநகர், கிருஸ்ணபுரம், மலையாளபுரம், பாரதிபுரம், விவேகானந்தநகர், உதயநகர் மேற்கு, அம்பாள்குளம், அம்பாள் நகர், மருத்தகர் பன்னங்கண்டி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியதாக குறித்த செயலமர்வு நடைபெற்றது.

இதன் வளவாளராக கிளிநொச்சி மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.ஜெயக்கணேஸ் மற்றும் World Vision நிறுவனத்தின்ரதேச கரைச்சி, கண்டாவளை பிரதேச திட்ட முகாமையாளர் மக்டலின் குயிண்டஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான்குளம், கண்ணகைபுரம், பொன்னகர், உதயநகர் கிழக்கு, ஆனந்தபுரம், தொண்டமான்நகர், கனகாம்பிகைக்குளம், திருவையாறு, திருவையாறு மேற்கு, இரத்தினபுரம், கிளிநகர், கனகபுரம், திருநகர் தெற்கு, திருநகர் வடக்கு, கணேசபுரம் ஜெயந்திநகர், பெரிய பரந்தன், உருத்திரபுரம் வடக்கு, உருத்திரபுரம் கிழக்கு, உருத்திரபுரம் மேற்கு, சிவநகர், வட்டக்கச்சி, சிவிக்சென்ரர், மாயவனூர், இராமநாதபுரம், மாவடியம்மன் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளதாக்கியதாக நடைபெற்றது.

விடயம் செயற்றிட்டம் தயாரித்தல், இடர் மற்றும் ஆபத்துக்களை படவரைபிற்கு
இதன்போது செயற்றிட்டம் தயாரித்தல்,

சிறுவர் பிரச்சினைகள் ஆபத்துக்கள் தொடர்பான வரைபடம் தயாரித்தல், எதிர்கால திட்டமிடல்கள், அறிக்கையிடல் மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களிற்கு பாரப்படுத்தல் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

மேலும் செயலமர்வின் இறுதியில் கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுக்களுக்கள் இச் செயலமர்வின் விடயங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில் படிவங்கள் மற்றும் காகிதாதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த செயலர்வில் World Vision நிறுவன உத்தியோகத்தர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழுக்களை சேர்ந்த கிராம் அலுவலர்கள், பொருளாதார அபிவிருந்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொது அமைப்பினர் உட்பட உறுப்பினர்கள், கிராமிய சிறுவர் அபிருத்திக் குழு அங்கத்தவர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அந் நிறுவனமானது இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சிறுவர் பாதுகாப்பு சார்ந்த பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.