திருகோணமலை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான ஆலோசனை நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் நலன்புரிச் சங்கத்தினால் இன்று மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் “தொற்றா நோய்களைத் தடுக்க மனநலத்தை நிர்வகித்தல்” என்ற தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட சமுர்த்தி முகாமையாளரும் நலன்புரி சங்க தலைவருமாகிய எச்.சஞ்ஜீவ உட்பட நலன்புரி சங்க குழுவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது தொற்றா நோய்களைத் தடுக்க மனநலத்தை நிர்வகித்தல்” என்ற தலைப்பின் கீழ் உளவியல் ஆலோசனை உத்தியோகத்தர் எல்.டி. கிருஷாந்த லக்மால் (இலங்கை கடற்படை) அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், புற்றுநோய், சுவாச நோய் போன்றவை சம்பந்தமான தெளிவூட்டல்களும் நடைபெற்றன. மேலும் இரத்த அழுத்தம், நீரிழிவு , உடல் நிறை குறியீடு (BMI) போன்ற பரிசோதனைகளும் இடம்பெற்றன. இந்தப் பரிசோதனைகள் இலங்கை கடற்படையின் சுகாதார உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திருகோணமலை  மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான ஆலோசனை நிகழ்வு

திருகோணமலை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான ஆலோசனை நிகழ்வு