வேலை நாட்களை ஐந்திலிருந்து நான்காக குறைத்தால் தொழிலாளர்கள் வாழ்வு மேம்படும்!
வேலை நாட்களை ஐந்திலிருந்து நான்காக குறைத்தால் தொழிலாளர்களின் நல்வாழ்வு கணிசமாக மேம்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த நடைமுறை குறித்து ஆய்வுகள் பல நடத்தப்பட்டுள்ளன.
இதனை நடைமுறைப்படுத்தும் நோக்கில் மீண்டும் மீண்டும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், அமெரிக்காவில் உள்ள பொஸ்டன் (BOSTON) கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அண்மையில் ஆய்வொன்றை நடத்தியுள்ளனர்.
அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள 141 நிறுவனங்களில் குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
சோர்வு, வேலை திருப்தி, உடல் மற்றும் மன ஆரோக்கியம் உள்ளிட்ட நான்கு முக்கிய குறியீடுகளை முன்வைத்துக் குறித்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை மற்றுமொரு ஆய்வில், தென் ஆபிரிக்கா உலகின் மிக மன அழுத்தம் மிகுந்த நாடுகளின் பட்டியலில் உள்ளமை கண்டறியப்பட்டது.
ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஒருசில நிறுவனங்கள் வேலை நாட்களை ஐந்திலிருந்து நான்காக குறைத்து தற்போதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
இலங்கை உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் இவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.
இதேவேளை அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இந்த முறை வெற்றியளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.