சிஐடியில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ( 22) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தி்ல் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

நியூயோர்க்குக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாடு திரும்பும்போது பல்கலைக்கழக நிகழ்வுக்காக அவர் பிரித்தானியாவுக்கு சென்றமை தொடர்பில் தற்போது நடைபெற்று வரும் விசாரணைக்காக அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது அவரது செயலாளராக இருந்த சமன் ஏக்கநாயக்க மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமும் அண்மையில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யதனர் .