ஆறு மாதங்களில் அதிகரித்த இலாபம்
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் செயற்பாட்டு இலாபம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 78 சதவீதம் அதிகரித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கான செயற்பாட்டு இலாபம் ரூ.9049 மில்லியனாகவும், 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கான செயற்பாட்டு இலாபம் ரூ.16,133 மில்லியனாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.