எல்லையில் அமைதியை பேணாமல் சீனாவுடன் உறவை மேம்படுத்த முடியாது
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி இற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய பதற்றமான காலத்திற்குப் பின்னர் உறவுகளை மேம்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இந்த உறவு முன்னேற வேண்டுமானால் முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
முதலாவதாக, எல்லையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தி, பதற்றத்தைக் குறைக்கும் செயல்முறையை முன்னெடுத்துச் செல்லுமாறு சீனாவை வலியுறுத்தினார்.
இரண்டாவதாக, பலதுருவ ஆசியா மற்றும் நியாயமான, சமநிலையான உலக ஒழுங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.