தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்க தயார்
இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் யாழ்ப்பாணத்தைத் தவிர்த்து ஏனைய இடங்களில் வெற்றியளித்துள்ளதாக தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் இதன்போது சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு கோரிக்கையை முன் வைத்து ஹர்த்தாலுக்கு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்தது.
அதனை ஏற்று வடக்கு கிழக்கில் பெரும்பாலான இடங்களில் ஹர்த்தாலுக்கு ஆதரவு கிடைத்திருந்தது.
இங்கே ஒற்றுமை ஒற்றுமை என கூறி திரிபவர்கள் இந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். எமது நோக்கம் சரியாக இருந்தால் அதற்காக ஆதரவு கொடுப்பார்கள்.
அவ்வாறு ஆதரவு கொடுத்தாலும் எங்களை துரத்துவதில் குறியாக நிறைய பேர் இருக்கின்றனர்.
அது தெரிந்தும் நோக்கம் சரியாக உள்ள போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம்.
போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளோம் எனவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.