சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸீத் அஹமட் நியமனம்

– அம்பாறை நிருபர்-

சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸீத் அஹமட் இன்று தனது கடமைகளை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதியத்தலாவ உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் இன்று முதல் சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றவுள்ளர்.என்பதோடு இவருக்கான நியமனத்தினை அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரமவினால் வழங்கப்பட்டது.

நிந்தவூரினை பிறப்பிடமாக கொண்ட இலங்கை நிர்வாக சேவை மூன்றாம் தரத்தினை சேர்ந்த வி வாஸீத் அஹமட் ,பதியத்தலாவ,மகாஓயா,ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா,பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல் முஹம்மட் அஸ்லம்,,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமில், மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே றினோஸா,உட்பட பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸீத் அஹமட் நியமனம்
சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி.வாஸீத் அஹமட் நியமனம்