பாகிஸ்தானில் தொடரும் கனமழை : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 657 ஆக உயர்வு!

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 657 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் 392 ஆண்கள், 94 பெண்கள், 171 குழந்தைகள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 929 என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அந்நாட்டு மாகாண அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.