யாழ். நல்லூர் வாள்வெட்டு சம்பவம் – ஐவருக்கு விளக்கமறியல்
யாழ். நல்லூரடியில் நேற்று நடந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஐவர் அடங்கிய குழு, நல்லூரடியில் இருந்த நால்வர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.