தியத்தலாவை வைத்தியசாலையை A தரத்துக்கு தரமுயர்த்த நடவடிக்கை

தியத்தலாவை ஆதார வைத்தியசாலையை A தரத்துக்கு தரமுயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தியத்தலாவை வைத்தியசாலைக்கு விசேட கள விஜயம் மேற்கொண்ட போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

மக்கள் தொகை, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுலாவுக்கு முன்னுரிமை அளிக்கும் தியத்தலாவை பகுதியின் சுகாதார நிலை மேம்படும் எனவும் சுகாதார அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.